புதன், அக்டோபர் 18, 2017

தீபாவளியின் தீபஒளி


 Dear… Blogger’s Greetings for DIWALI
God Bless you & your Family


தீபாவளியாம் இந்த தீபத்திருநாளில் என் மனதறிந்த நண்பர்களுக்கும், என் மனதறியா எதிரிகளுக்கும் தீயவழிகள் ஒழிந்து வாழ்வில் தீபஒளி கிடைத்து என்னைப் போல் இல்லாமல் பொன்னைப் போல் ஜொலித்து வாழ்ந்திட இந்த பரந்து விரிந்த புவியளவும் உயர்ந்து வளர்ந்த வானளவும் ஓங்கி ஒலிக்க வாழ்த்தும் இந்த நன்நாளில்....

நண்பர் நரகாசுரனுக்கு கிடைத்தது போல் இல்லாமல்
என்னுடைய மரணம் எந்த ஒரு மனிதனுக்கும் சந்தோஷத்தை கொடுக்ககூடாது அந்த முறையில் நான் வாழ்ந்து முடிய அருள் கொடு இறைவா.... என பிரார்த்திக்கும்
உங்கள் – கில்லர்ஜி

பதிவுக்காக நேற்றைய தேவகோட்டை நிகழ்வுகளை கீழே காண்க...
video
காணொளி

திங்கள், அக்டோபர் 16, 2017

நையாண்டி தர்பார்

வடிவேலு கிணற்றைக் காணோம்னு
சொன்னதை உண்மை ஆக்கிட்டீங்களேடா...
நாந்தேன் ரெண்டு பேருக்கும் வாடகைக்கு விட்டேன்.
எவன் தலையில் விழுந்தால் எனக்கென்ன ?
ஒதுக்கிய பணத்தில் சாதாரணமாக கட்டுங்கடா போதும்.
இருபது வருடங்களுக்கு முன்பு நான் ஊரணியில்
குளிக்கும்போது தாத்தா பின்னாலிருந்து எடுத்த படம்.
இதற்குதான் பெயிண்டரிடம் பேரம் பேசக்கூடாது
மனுஷன் கேள்வி கேட்டது தப்பா ?
இந்த இனியாவை கரைக்ட் பண்ணவே முடியலையே...
 (சிறிய திருத்தம் மட்டுமே எனது)
திருச்சிகாரவுங்க சண்டைக்கு வந்தா அழுதுடுவேன்.
வாய் கூசாமல் பொய் பேசுறீங்களேடா...
எதைத்தான் நம்புவதோ... பேத்தை நெஞ்சம்.
முடி வெட்டிய முடுதாறுக்கு ஒரு சபாஷ்
சுளையில் சுளை குத்திடுச்சோ...
இனி எழுத்துக்கூட்டி படிச்சு என்ன செய்ய ?
இங்கிலீஷ்காரன் எது செய்தாலும் தவறில்லையோ...
இதுவும் வேண்டுமடா உமக்கு இன்னமும் வேண்டுமடா
கலைத்தாகம் கட்டவுட்டை கிழிக்கும்
புதிய டீலக்ஸ் கோச் டெல்லியிலிருந்து இறக்குமதி.
பதிலுக்கு பதிலடி கொடுப்பேன்.
மதம் மறப்போம், மனிதம் காப்போம்.

 என்னிடம் பேரம் பேசாமல் ஒரு படம் அனுப்பி வைத்த நண்பர் திரு.வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி

சனி, அக்டோபர் 14, 2017

கலிகாலம்


கலிகாலமாகிப் போச்சு, உலகம் அழியத்தான் இந்த மாதிரியான அக்கிரமங்கள் நடக்குது என பெரியவர்கள் சொல்வதற்கு தகுந்தாற்போல இன்றைய விஞ்ஞான வளர்ச்சியும் அதைதானே நமக்கு காட்டுகிறது, எங்கு நோக்கிணும் அழிவு சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், பனிக்கட்டி மழை, சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு, எரிமலை வெடிப்பு, புயல், எங்கும் மனித உயிர்கள் பலி புதிது புதிதாக ஏதேதோ வருகிறது. இந்த அழிவிற்கு நாங்கள்தான் பெயர் சூட்டுவோம் என ஒவ்வொரு நாடுகளும் போட்டி போடுகின்றன... இதை என்னவென்று சொல்வது ?

அழவேண்டிய தருணத்தில் சிரிப்பவனைகூட இவன் மனநோயாளி அல்ல ! மனதைரியசாலி என மாற்றி எண்ணிக்கொள்ளலாம், ஆனால் நான்தான் சிரிப்பேன் என சண்டையிட்டு கொண்டால் கோமாளித்தனம் அல்லவா ? இந்த நிலைகெட்ட மனிதனின் செயலைப் பார்த்து இறைவன் சிரிக்க மாட்டானா ? இறைவனும் ரசிப்பதற்கு இந்த பூமியில் ஏதாவது வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இப்படி ஒரு சூழலை உருவாக்குகிறானோ ? ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு ஒரு பழமொழி சொல்வாங்க... அது மனிதர்களுக்கு மட்டுமல்ல ! எல்லோருக்கும் எல்லா நிலையிலும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.. சரி விஞ்ஞான வளர்ச்சியால் மனித உயிர்களுக்கு அழிவு என்பது கண் கூடாகத் தெரிகிறது, நாம் அனைவரும் (உலகநாட்டு தலைவர்களும், உலகலாவிய விஞ்ஞானிகளும்) ஒருமித்த கருத்துக்கு வந்து நாம் பொற்காலமான அந்த கற்காலத்திற்கே மீண்டும் போய் ஒவ்வொரு மனிதனும் நூறு ஆண்டு காலம் வாழ்ந்து பிறவிப்பயனை அடைவோமென தீர்மானத்திற்கு வந்து இருக்கின்ற விஞ்ஞானத்தை ழிக்கா விட்டாலும் பரவாயில்லை அடுத்த கட்ட நிலைக்கு செல்லாமல் நிறுத்தினால் என்ன ?

நெஞ்சு பொறுக்குதில்லையே...
நெஞ்சு பொறுக்குதில்லையே...
இந்த... நிலைகெட்ட மனிதரை
நினைந்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே...

சாம்பசிவம்-
பாஸ் ஒரு வார்டு கவுன்சிலரை தேர்ந்தெடுக்கிறதிலயே ஆயிரத்தெட்டு கருத்து வேறுபாடு இருக்கு இதெல்லாம் நடக்குமா ?

Chivas Regal சிவசம்போ-

இவரு அரைமணி நேரத்துக்கு மொபைல் இல்லாம இருக்கட்டும் பார்ப்போம் இவரே இண்டர்நெட்ல வெப்சைட் உருவாக்கி இதை வெளியிடுறாரு ஏன் ஓலையில எழுதி ரோட்டுல போறவன் கிட்டே கொடுக்கச் சொல்லுங்க பார்ப்போம் அவனவன் நெட்ல குவாட்டரை புக் பண்ணி ஆஃப் அவர்ல வரவச்சு ஃபுல்லப் பண்ணிக்கிட்டு போய்க் கிட்டே இருக்கான்.... பொற்காலமாம், கற்காலமாம்.. நாமகேட்டா குடிகாரப்பயல்னு சொல்வாங்கே...

வியாழன், அக்டோபர் 12, 2017

வியக்கத்தகு வில்லியம்ஸ்

Williams Shakespeare

ஒரு சமயம் உலகே ஆச்சர்யப்பட்ட இங்கிலாந்து நாட்டு பேரறிஞர் ஷேக்ஸ்பியரை அந்தக் காலகட்டத்தில் உலக அழகி பட்டம் பெற்றவள் சந்தித்தாள் அப்பொழுது அவள் ஷேக்ஸ்பியரிடம்...

நீயோ உலகறிந்த அறிவாளி நானோ உலகில் சிறந்த அழகி. நீயும், நானும் திருமணம் செய்து கொண்டால் என்னைப்போல் அழகாகவும், உன்னைப்போல் அறிவாகவும், குழந்தை பிறக்கும் என்றாள்.

இந்தக் கேள்வியை, நம்மைப் போல் ஒரு மனிதனிடம் கேட்டிருந்தால் நாம் என்ன சொல்லி இருப்போம் ? ஆனால் ஷேக்ஸ்பியர் என்ன சொன்னார் தெரியுமா ?

உனது எண்ணம் போலில்லாமல், என்னைப்போல் அழகாவும், உன்னைப்போல் அறியாமையிலும், பிறந்தால் அந்தக் குழந்தையை என்ன செய்வது ? என்று கேட்டு மறுத்து விட்டார்.

ஆனால் இன்று மேக்கப்பின் உதவியால் ஒரு அழகான சினிமா நடிகை நாமிருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று சொன்னால் என்ன சொல்வார்கள் ? அவளின் வாழ்க்கையைப்பற்றி எந்த ஒரு சிந்தனை உணர்வுமின்றி மறு நிமிஷமே சம்மதம் சொல்லி விடுவார்கள்.

சாம்பசிவம்-
சிந்தனை எப்படியய்யா வரும் ? அன்னைக்கு உள்ள மனுஷன் சிந்திச்சு பதில் சொன்னான் காரணம் அவன் சோத்தை தின்னான், இன்னைக்கு அப்படியா ? பாக்டம்பாஸ் 20, 30, 40 அப்படின்னுல தின்னுக்கிட்டு இருக்கான்.

Chivas Regal சிவசம்போ-
அதுசரி ஷேக்ஸ்பியருமா சோத்தை தின்னாரு ?

செவ்வாய், அக்டோபர் 10, 2017

என் நினைவுக்கூண்டு (7)

கோவளம் கடற்கரையில் நீ

இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்... 

உனது மறைவு நாளில் எனது மரணகாலம்வரை என்னால் இயன்ற நல்ல காரியத்தை உனக்காக செய்வேன் என்று உறுதியேற்று தேவகோட்டை நோக்கி பயணித்தேன்.

   னிதா உனக்கு பேச்சு தெளிவாக வரவேண்டும் என்று 1989-ல் சபரிமலைக்கு அழைத்துப் போனேன் அதேநேரம் இன்று நினைத்துப் பார்க்கிறேன் கடைசி காலத்தில் நீ சராசரிப் பெண்ணைப் போலவே மாறி விட்டாய் எல்லா வார்த்தைகளையுமே பேசினாய். ஆம் உனக்கு எல்லாமே தெரியும். அணையப் போற விளக்கு பிரகாசிக்கும் என்று சொல்வார்களே... இதற்குத்தானா ? பதிவர்களில் பலரும் என்னிடம் கேட்டு இருக்கின்றார்கள் நான் ரசிக்கும் படியான எடக்கு மடக்கான வார்த்தைகளை உபயோகப்படுத்துகின்றேன் என்று இது எனக்கு எங்கிருந்து கிடைத்தது ? எனக்கு பதினைந்து வயது குறைந்த உன்னிடமிருந்தே கற்றுக்கொண்டேன் என்பதை இங்கு உள்ளன்புடன் பதிவு செய்கிறேன் ஆம் எல்லா வார்த்தைகளுமே உனக்கு பேச வரும் ஆனால் வார்த்தைகளையும், பெயர்களையும் குழப்பி பேசுவாய் உதாரணத்திற்கு சாந்தி மகன் ராம்கியை பக்கி என்று கூப்பிடுவாய். அவன் பெயர் பக்கி இல்லை ராம்கி என்று சொன்னால் ராம்கி இல்லை பக்கி என்று சொல்வாய். ஆக உன்னால் ராம்கி என்று சொல்ல முடியும். சென்னையில் இருக்கும் ஸபரி மகன் ரித்தீஷை சுப்ரமணி என்று அழைப்பாய் எல்லோருக்கும் ரித்தீஷானவன் உனக்கு மட்டுமே சுப்ரமணி. கோபியை கோலிப்பீ என்றழைப்பாய். இப்படித்தான் நீ அனைவருக்கும் ஒரு பெயர் வைத்திருப்பாய் இன்று அந்த வார்த்தைகளை சொல்லி அழைக்க யாருமில்லை.

மேலும் உன்னிடமிருந்து நிறைய விடயங்கள் படித்து இருக்கிறேன் இவைகளை வாழ்க்கைப்பாடம் என்றும்கூட சொல்லலாம் யாரையும் சாதாரணமாக நினைத்து மதிப்பிடக்கூடாது என்பதை சத்தியமாக உன்னிடமே கற்றுக்கொண்டேன் வீட்டு வேலைகள் அனைத்தையுமே நீதான் செய்வாய் சமைப்பதைத் தவிர ஒருமுறை உனது தாவணியில் தீப்பிடித்து விட்டதால் உன்னை அம்மா சமையல் பக்கம் விடுவதில்லை எவ்வளவு வேலைகள் பார்த்தாலும் சரியான நேரத்துக்கு வந்து தொலைக்காட்சியை போட்டு நாடகம் பார்க்க வந்து விடுவாய் இத்தனைக்கும் உனக்கு கடிகாரம் பார்க்கத் தெரியாது. முதன் முதலில் அவ்வளவு பெரிய டிவியை கண்டு உனது முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்து நான் சந்தோஷப்பட்டேன். அந்த தெருவிலேயே நமது வீட்டில்தான் முதன் முதலில் இவ்வளவு பெரிய டி.வி. வந்தது இதை தெரு மக்களே அடிக்கடி ///வனிதா உங்க அண்ணன் உனக்காக பெரிய டி.வி. வாங்கி இருக்கே/// என்று கிண்டல் செய்வார்கள். ரிமோட் உனது கைக்கு போனால் பிறகு வேறு யாரும் எதையும் பார்க்க முடியாது. அந்த நாடகங்களின் பெயர்கள் ஒன்று அதற்கு நீ வைத்திருக்கும் பெயர்கள் ஒன்று நீ நாடகம் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது விளம்பரம் வந்தால் உடன் MUTE வைத்து விடுவாய் யாரும் ஏன் என்று கேட்டால் ? கொய்யாப்பலம் எதுக்கு... கரண்டு எவ்வளவு தெரியுமா ? நாப்பது ரூவா என்பாய் விளம்பரத்துக்கு நீ வைத்திருக்கும் பெயர் கொய்யாப்பலம். விளம்பரம் முடிந்ததும் மீண்டும் சப்தம் வைப்பாய். விளம்பரங்களில் வரும் பிஸ்கட், சோக்லெட் வேறு ஏதாவது திண்பண்டங்கள் வரும் பொழுது.. அண்ணே.... இது வாங்கித்தாண்ணே.... என்பாய் சரி நாளைக்கு வாங்கித்தாறேன் என்பேன் உடன் ஐ..... எங்க அண்ணம்பூ... என்று என்னை அணைத்துக் கொள்வாய் அதன்படியே மறுநாளோ... அல்லது மற்ற சில நாட்களிலோ வாங்கி கொடுத்து விடுவேன். வனிதா நீ உனது வாழ்நாளில் என்னிடம் நேரிலும் சரி தொலைபேசியிலும் சரி அதிகம் பேசிய வார்த்தை ஐ.... எங்க அண்ணம்பூ... இதுவாகத்தான் இருக்கும் எத்தனை ஆயிரம் முறைகள் சொல்லி இருப்பாய்... இன்னும் எனது காதில் ஒலிக்கின்றதடா... இதோ இந்நொடி இதை எழுதும் பொழுதுகூட எனது விழிகள் நனைகின்றன.


விளம்பரத்தில் ஒருநாள் தாமஸ் ஜூவல்லர்ஸின் வைர நகைகள் காண்பித்துக் கொண்டு இருக்க, அண்ணே இது வாங்குண்ணே.... என்றாய் நான் சற்றே இளக்காரமாக, ஏன் அகம்பாவமாக என்பதையும் இந்நொடி உன் ஆன்மாவிடம் மன்னிப்பு கோரியும்கூட சொல்கிறேன். யாருக்கு ? என்று கேட்டேன் அதற்கு நீ சொன்ன வார்த்தை எனக்கு தலையில் செருப்பால் அடித்து எனது அகம்பாவத்தை இறக்கியது போலிருந்தது. எதையும் அவசரப்பட்டு தீர்மானிக்க கூடாது என்பதை அனுபவத்தில் வாயிலாக அன்று உணர்ந்து படித்தேன் நீ சொன்னாய். பூபலாக்குட்டிக்கு.... கல்யாணத்துக்கு ஸூப்பரா இருக்கும். (எனது அன்பு மகள் ரூபலா) ச்சே நான் உனக்குத்தான் கேட்கிறாய் என்று நினைத்து விட்டேனே.... மேலும் இதெல்லாம் விலையுயர்ந்தவை அண்ணன் நமக்கு வாங்கித்தராது என்று நீ தீர்மானித்து இருக்கின்றாய். ஆகவேதான் தின்பண்டங்களை மட்டும் உனக்கு கேட்டுக்கொண்ட நீ வைர நகைகளை எனது மகளுக்கு வாங்கச் சொல்கின்றாய் அதுவும் கல்யாணத்துக்கு என்று உனக்கா உலகம் புரியவில்லை ? குடும்பத்தில் எவ்வளவோ பேருக்கு நகைகள் வாங்கி கொடுத்து இருக்கிறேன் அவர்களில் இன்று யாருக்கு நன்றியுணர்வு உண்டென திரும்பிப் பார்க்கிறேன் ஒரேயொரு நபரைத்தவிர அந்த நபர் பெரிய தங்கை மட்டுமே... உனக்கு நகை வாங்கி கொடுக்கவே இல்லை அந்த எண்ணம் வராமல் போனதற்கு காரணம் உன்னை மூளையற்றவள் என்று சொன்ன, அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள் அதேநேரம் நான் கடைசியில் கேன்சலில் வரும் பொழுது உனக்கு செயின் வாங்கி வந்தேன் காரணம் நீ என்னுடன்தானே இருக்கப் போகின்றாய் என்னை மீறி யாரும் உன்னிடமிருந்து வாங்கிட முடியாது என்பதால் சிறிது காலம் போட்டிருந்தாய் கடைசியாக நீ கலந்து கொண்டது புவனா மகள் சடங்கில் வனிதா எவ்வளவு விசேஷங்களில் நீ இருந்தாய்.... ராஜாத்தி, ஸபரி, பிருந்தா, செல்வம், ராஜா, வித்யா எல்லோர் திருமணத்திலும் இருந்து வாழ்த்தினாயே.... என் மகள் திருமணத்துக்கு இல்லாமல், வாழ்த்தாமல் போய் விட்டாயடா...... நான் எதிலுமே ராசி இல்லாதவன் என்பது இதிலும் நிரூபணமாகி விட்டதே.... நீ போட்டிருந்த செயினை யாருக்கும் கொடுக்காமல் வைத்து இருக்கின்றேன். அபுதாபியில் இருக்கும் பொழுது நண்பர்களுக்கு நகை எடுக்க நான்தான் தேர்வு செய்ய வேண்டும். கடந்த இருபத்தி ஆறு வருடங்களாக என் மனதை பாதித்த ஒரு காரணத்திற்காக யாருக்கு தங்க நகைகள் வாங்க கடைக்குப் போனாலும் கழுத்தில் போட்டுக்கூட பார்ப்பதை கவனமாக தவிர்த்து வந்த நான் உனது செயினை உனது நினைவாக எனது மரணகாலம்வரை போட்டுக் கொள்வோமா ? என்று ஆலோசிக்கின்றேன்.


நமது வீட்டுப் பிள்ளைகள் ஏதாவது தவறு செய்து விட்டால் ? உடன் உன்னிடமிருந்து வரும் வார்த்தை. இந்தப் பழக்கம்தானே நாளைக்கு வரும்... எல்லோரும் சிரிப்பார்கள் நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன் மூளை வளர்ச்சி இல்லாதவள் என்று இந்த சமூகம் சொல்லி விட்ட உன்னிடமிருந்து இந்த வார்த்தைகள் வருகிறதே... எப்படி ? இது அனுபவித்து வாழ்ந்து முடிந்த எண்பது வயது கிழவிகளின் வாயிலிருந்து வரவேண்டிய கண்டிப்பு மிக்க வார்த்தைகள் ஆயிற்றே... நம் வீட்டு குழந்தைகள் இந்த வார்த்தைகளை அடிக்கடி விளையாட்டாக சொல்லி வந்தவை இப்பொழுது யாரும் சொல்வதில்லை...

கூண்டுகள் சுழலும்...

சனி, அக்டோபர் 07, 2017

கவுண்டர்க்காரி


ஒருமுறை அபுதாபி மாலில் குளியல் சோப் நான்கு வாங்கினேன் அதன் விலை பத்து திர்ஹாம்ஸ் கவுண்டரில் பணம் கொடுப்பதற்காக வரிசையில் நிற்க எனக்கு முன்னாலிருந்த பெண் பொருட்களை மிஷினில் வைத்துக் கொண்டு இருந்தாள் கவுண்டரில் வழக்கம்போல பிலிப்பைனி பெண் கூடவே சூப்பர்வைசர் பெண்ணும் கவுண்டரில் இருந்தவள் என்னை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தாள் பல இடங்களிலும் இதுதானே நடக்கிறது இறைவன் தெரியாத்தனமாக என்னை அழகாக படைத்து விட்டதே காரணம் வேறன்ன செய்வது எனக்கும் இது பழகி விட்டது பொதுவாக பிலிப்பைனிகள் பேசுவதை யாருமே கவனிக்க மாட்டார்கள் காரணம் பேச்சின் தொணி நம்மூரில் குறத்திகள் பேசுவார்களே அதைப்போலவே இருக்கும் அவர்கள் கூடினால் பேஸிக்கே இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் நான் ஒட்டுக் கேட்பேன். அப்பத்தானே பதிவு போடமுடியும் இவள் சொன்னாள் சூப்பர்வைசரிடம்...

பயான் பிகோத்தி நக்கீதா மல்லாக்கி மைரோன்.
இவன் மீசையைப்பார் பெரிசா இருக்கு
சூப்பர்வைசரும் சிரித்துக்கொண்டே...
பாகெட் கட்டொலெட் நிடோ
ஏன் இந்த மாதிரி
பயான் அஷாவாங் பபாய் சலித்தா குஸ்தகோ...
இவன் மனைவி வேணும்னு.... சொல்லியிருப்பாள்.
இவள் சிரிக்க... எனது நேரம் வந்தது சோப்பை மிஷினில் செக் செய்தவள்
குட் ஈவ்னிங் சார்.
குட் ஈவ்னிங் ட்டூ யூ.
டென் திர்ஹாம்ஸ் ப்ளீஸ்.
நான் நூறு திர்ஹாம்ஸ் எடுத்துக் கொடுக்க, பாக்கி தொண்ணூறு திர்ஹாம்ஸுக்கு, இரண்டு இருபது திர்ஹாம்ஸும், மூன்று பத்து திர்ஹம்ஸும், நான்கு ஐந்து திர்ஹாம்ஸும் கொடுக்க, நான் வாங்கி அவளுக்கும் கேட்கும்படி எண்ணினேன் இப்படி.

டலவாம்போ இருபது
அபாட்னபோ நாற்பது
லிமாங்போ ஐம்பது
அனினபோ அறுபது
பிதோம்போ எழுபது
பிதோம்போத் லிமா எழுபத்து ஐந்து
வாலோம்போ எண்பது
வாலோம்போத் லிமா எண்பத்து ஐந்து
ஷ்யாம்னபோ தொண்ணூறு
பணத்தை பர்ஸில் வைக்கும்போது கவனித்தேன் மிரண்டு போய்...
நாக்ஸிஸிஸி
ஸாரி
ஓலா ப்ராப்லமா
பிரச்சனை இல்லை
சலாமத்
நன்றி
ஓலாங்கனுமான்
பரவாயில்லை
நகரும்போது எதிர்ப்புறமுள்ள கண்ணாடியில் கவனித்தேன் இரண்டு பிலிப்பைனிகளும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இதை எதற்காக பதிவு செய்தேன் தெரியுமா
எங்கள் கழுத்தை அறுக்கத்தான்
இல்லை நண்பா அதன் பிறகு நான் அங்கு போனால் அவளது கவுண்டருக்கே போவேன்
அதான் தெரியுமே
இதில் பழக்கம் தொற்றிக் கொண்டது
எழுதிய விதி இப்படித்தான்
மற்றொரு தருணத்தில் நானும் எனது பிலிப்பைனி நண்பனும் பிலிப்பைன்ஸ் தூதரகம் சென்றோம் அவனது குழந்தையின் பாஸ்போர்ட்டில் ஒரு பிரச்சனை. அதை சரி செய்வதற்காக நான் பொழுது போகாமல் சும்மா உதவிக்காகத்தான் எனது காரை எடுத்துக்கொண்டு போனோம் அங்கு பிரச்சனை தலைதூக்க நான் கவுண்டர்க்காரிக்கு போன் செய்தேன் அடுத்த பத்து நிமிடத்தில் உள்ளிருந்து ஒரு பெரியவர் வந்தார்
ஹூஸ் இஸ் ஹியர் மிஸ்டர் கில்லர்ஜி
யெஸ் ஸார்
எங்களிடமிருந்து பாஸ்போர்ட்டையும் பேப்பர்களையும் பெற்றுக்கொண்டு உள்ளே போனவர் அடுத்த கால்மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு பாஸ்போர்ட்டுடன் வந்தார் சித்தப்பாவுக்கு நன்றி சொல்லி விட்டு வெளியேறினேன் அவர்தான் கவுண்டர்காரியின் தாய்மாமன் அன்று அவள் எனது மீசையை கிண்டல் செய்ததற்கு கண்டு கொள்ளாமல் வந்திருந்தாலோ, இல்லை அவளுடன் சண்டையிட்டு வந்திருந்தாலோ, இன்று இந்த வேலை முடிந்து இருக்குமா... கோபம் வந்து பயன் என்ன... ஏதோ கொழுந்தியாள்தானே என்று நான் விட்டுக்கொடுத்து வந்ததால் லாபம்தானே... பொருத்தவர் பூமி ஆள்வார் என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா...
// மற்றவரைத்தாக்கி வீழ்த்துகிறவன் வீரனல்ல கோபம்
வரும் சமயம் அதை அடக்கி கொள்பவனே வீரனாவான் //
எங்கோ எப்பொழுதோ சுவற்றில் எழுதியிருந்து நான் படித்த வாசகம் என் மனக்கண்ணில் வந்து போனது 


CHIVAS REGAL சிவசம்போ-
இதே ஆம்பளை ஒருத்தன் மீசையை இழுத்துப் பார்த்திருந்தால் ?
சாம்பசிவம்-
இழுத்தவன் கையில கோடரி வெட்டுதான்.
Related Posts Plugin for WordPress, Blogger...